நிர்பயா குற்றவாளிகளான 4 பேரையும் மார்ச் 3-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் அக்சய் தாகூர், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், பின்னர் பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் குற்றவாளிகள் தரப்பில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரி, திகார் சிறை நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோர் சார்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளான 4 பேரையும் மார்ச் 3-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து பின்னர் தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.