ரஷ்­யாவில் 13 வயது மாண­வியை 10 வயது சிறுவன் கர்ப்­ப­மாக்­கி­ய­தாகக் கூறப்­ப­டும் சம்­பவம் பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட நிலையில், குறித்த சிறுமி தற்­போது தான் 15 வய­தான சிறு­வனால் பாலியல் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கப்­பட்­ட­தாக கூறி­யுள்ளார்.

ரஷ்­யாவின் சைபீ­ரிய பிராந்­தி­யத்­தி­லுள்ள ஸேலேஸ்­னோகோர்ஸ் நகரைச் சேர்ந்த 13 வய­தான சிறுமி தார்யா என்­ப­வரே இவ்­வாறு கர்ப்பம் தரித்தார்.

உணவு ஒவ்­வாமை கார­ண­மாக வயிறு வீங்­கி­யுள்­ள­தாக அச்­சி­று­மியின் பெற்றோர் எண்­ணினர். ஆனால், பின்னர் அச்­சி­றுமி கர்ப்­ப­மா­க­வுள்­ளமை தெரி­ய­வந்­தது.
தார்­யாவுடன் ஐவன்

தனது கர்ப்­பத்­துக்கு 10 வயது சிறு­வ­னான ஐவனே காரணம் என அச்­சி­றுமி கூறி­யமை மேலும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. ஆனால், அச்­சி­று­வனும் தானே தார்­யாவின் கர்ப்­பத்­துக்கு காரணம் எனத் தெரி­வித்தான்.

ரஷ்­யாவின் தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­யொன்றின் நிகழ்ச்­சி­யிலும் இவ்­வி­டயம் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டது. 13 வயது சிறுமி தார்யா, 10 வயது சிறுவன் ஐவன் ஆகியோர் தமது தாய்­மார்­க­ளுடன் அத்­தொ­லைக்­காட்சி நிகழ்ச்­சியில் பங்­கு­பற்­றினர்.

Rossiya-1-Darya-with-mother-1
தாயாருடன் தார்யா

மேற்படி சிறுமி வேறு யாருடனும் சேர்ந்திருக்கவில்லை எனவே தன்னைத தவிர வேறு யாரும் அக்குழந்தைக்கு தந்தையாக இருக்க முடியாது என ஐவன் கூறினான். தனது மகன் கூறுவதை தாம் நம்புவதாக ஐவனின் தாயார் கெலினா தெரிவித்திருந்தார்.

தனது மகள் கூறுவதை தான் நம்புவதாக தார்யாவின் தாயார் எலினாவும் தெரிவித்திருந்தார். பிர­பல தொலைக்­காட்சித் தொகுப்­பாளர் அன்ட்றே மலாகோவ் நடத்­திய இந்­நி­கழ்ச்­சியில் மருத்துவர் இயூ­ஜினி கிறி­கோவும் பங்­கு­பற்­றினார். மேற்­படி சிறுவன் இக்­கு­ழந்­தைக்கு தந்­தை­யாக இருக்க முடி­யாது என அவர் கூறினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தார்யா, ஐவன் கலந்துகொண்டபோது…

நாம் 3 தட­வைகள் ஆய்வு கூடத்தில் சோதனை நடத்­தினோம். பெறு­பேற்றில் தவறு ஏற்­பட்­டி­ருக்க முடி­யாது என அவர் கூறினார். இது குறித்த தக­வல்கள் பல நாடு­களின் ஊட­கங்­க­ளிலும் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் வெளி­யா­கின.

இந்­நி­லையில், தன் வயிற்றில் வளரும் குழந்­தைக்கு தந்தை ஐவன் அல்ல. நான் 15 இளைஞன் ஒரு­வரால் கட்­டா­யப்­ப­டுத்தி, பாலியல் உற­வுக்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்டேன் எனக் கூறி­யுள்ளாள்.

இச்­சி­று­மிக்கு தற்­போது 14 வய­தா­கு­கி­றது.
Ivan-and-mother

தாயாருடன் ஐவன்இதனால் 15 வய­தான மேற்­படி சிறுவன் தற்­போது ரஷ்ய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு, சிறுவன் வீட்டுச் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் உள்ளூர் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

 

Share.
Leave A Reply