சீனாவில் கொரோனா வைரஸ் எனும் கொவிட்-19 வைரஸினர் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1770 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சீனாவில் 105 பேர் கொவிட் 19 வைரஸினால் உயிரிழந்துள்ளனர் இதனால் சீனாவில் கொரோனா வைரஸினால் சீன பெருநிலப் பரப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,770 ஆக அதிகரித்துள்ளது என சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

மேற்படி மரணங்களில் 100 மரணங்கள் ஹுபேய் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன {ஹபேய் மாகாணத்தின் தலைநகர் வுஹானில் 76 பேர் இறந்துள்ளனர்.

அத்துடன் சீனாவில் கொவிட்19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2,048 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், கொரோனா வைரஸ் எனும் கொவிட் ரைவஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை சீனாவில் 70,548 ஆக அதிகரித்துள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று மாத்திரம் 1,425 பேர் குணப்படுத்தப்பட்டு வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனால் இதுவரை குணப்படுத்தப்பட்டு வெளியேறியோரின் எண்ணிக்கை 10,844 ஆக உள்ளது எனவும் சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply