இறந்தவருக்கு பூ வீசுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து தூங்கி கொண்டிருந்த சரவணன் மற்றும் அவரது நண்பர் சதீஷ் இருவரையும் அழைத்து, ராமச்சந்திரன் தன்னுடைய நண்பர்கள் மாதவன், செந்தில் குமார், ரஞ்சித் ஆகியோருடன் இந்த பிரச்சினை தொடர்பாக மீண்டும் பேசியிருக்கிறார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனை குத்தி இருக்கிறார்.
இதில் சரவணன் படுகாயமடைய அவரை அருகில் இருந்தவர்கள் எழுப்பி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர் சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுதொடர்பாக ராமச்சந்திரன், மாதவன், செந்தில் குமார், ரஞ்சித் ஆகிய நால்வரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.