ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி இருக்கும் நான் சிரித்தால் படத்தின் விழாவில் கலந்துக் கொண்ட குஷ்பு, அவன்தான் எனக்கு சக்களத்தி என்று பேசியிருக்கிறார்.

ஹிப் ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதற்கான வெற்றி சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு, இயக்குனர் ராணா, நடிகர்கள் ஆதி, ஐஸ்வர்யா மேனன், கேஎஸ்,ரவிகுமார், ரவிமரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் குஷ்பு பேசும்போது, ’நீண்ட இடைவெளிக்கு பிறகு தோன்றும் சினிமா மேடை. தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணம் எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது.

நானும் கணவரும் சிறு வயதில் இருந்தே சினிமாவில் தான் இருக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தால் சரியான நேரத்தில் சம்பளம் போய்விடும்.

202002191455441481_1_aadhi-1._L_styvpfநான் சிரித்தால் படக்குழுவினர்

தயாரிப்பை பொறுத்தவரை எல்லாமே சுந்தர்.சி தான். நாங்கள் சினிமாவை நேசிக்கிறோம். எங்களுக்கு மூச்சே சினிமா தான்.

எல்லா படங்களுமே ஓடவேண்டும். லாபம் பார்க்கவேண்டும் என்றுதான் விரும்புகிறோம். என் சின்ன மகள் தான் முதலில் ஆதிக்கு விசிறி ஆனார்.

ஒரே ஒரு பாடலுக்கு இசையமைக்க வந்தவர் இப்போது குடும்பத்தில் ஒருவராகி விட்டார். தூக்கத்தில் எழுந்து பார்த்தால் கூட சுந்தர்.சி ஆதியுடன் பேசிக்கொண்டு இருப்பார். என்னுடைய சக்களத்தி என்றே ஆதியை சொல்லலாம்’ என்றார்.

Share.
Leave A Reply