கேரள காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ காண்போர் பலரையும் மெய்சிலிர்க்கச் செய்துள்ளது.
ஆனால் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவில் சாலை ஒன்றில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டு இருக்கிறது.
அப்போது அதற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த சிறிய கார் ஒன்று, வளைவு என்றும் பாராமல் பேருந்தை ஓவர் டேக் செய்து கொண்டு முன்னேறி சென்றது.
அப்போது காரின் எதிர்த் திசையிலிருந்து தீ அணைக்கும் வாகனம் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
எதிர்த்திசையில் கார் வருவதைத் தக்க நேரத்தில் பார்த்த தீ அணைக்கும் வாகனத்தின் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோவை கேரள காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
സൂക്ഷിക്കുക!
വളവുകളിലെ ഓവർ ടേക്കിങ് അപകടമാണ് pic.twitter.com/DtmYQUPYYN— Kerala Police (@TheKeralaPolice) February 18, 2020