திருகோணமலை, பத்தினிபுரம் பகுதியில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா, ஜாவா வீதி, பெரியாற்று முனை பகுதியைச் சேர்ந்த 35 வயதான நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம் போட்டாறு, பத்தினிபுரம் பகுதியில் மாட்டுப்பட்டி வைத்திருக்கின்ற  நிலையில் நேற்றிரவு மூவர் கூட்டாக இணைந்து மது அருந்தியதும் அதனை அடுத்து இருவரும் வரும் வழியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து தடியால் தாக்கியதாகவும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை உயிரிழந்த நபரிடம் கத்தியொன்று கையில் காணப்பட்டதால் அதே கத்தியை எடுத்து கையில் வைத்ததாகவும் அவரின் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முள்ளிப்பொத்தானை, 10ஆம் கொலனியைச் சேர்ந்த முகம்மட் ரவூப் றிபாஸ் (36) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை சட்ட வைத்திய நிபுணர் மற்றும் கந்தளாய் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply