நேற்று வெள்ளிக்கிழமை கொவிட்-19 வைரஸினால் 109 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் சீன பெருநிலப்பரப்பில் கொவிட்-19 வைரஸினால்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,345 ஆக அதிகரித்துள்ளது என சீனாவின் சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

நேற்று உயிரிழந்த 109 பேரில் மரணங்களில் 106 பேர் ஹுபேய் மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் சீனாவில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 397 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 76288 ஆக அதிகரித்துள்ளது எனவும் அறிவிக்கப்பட்டள்ளது.

இதேவேளை 20,659 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும் சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊலகளாவிய ரீதியில் கொவிட் -19 வைரஸினால் உயிரிந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உள்ளது. 77,811 பேருக்கு இவ்வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20949 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply