இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்திலும் 14 மாகாணங்களில் குறைந்தது 16 மில்லியன் மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருப்பதாக அந் நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கையானது எப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்றம் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 230 ஐ கடந்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 50 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந் நிலையில் இதுவரை இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5,883 ஆக காணப்படுகிறது.

