யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நபர் 30 வயதுடைய மானிப்பாய் – கொல்லியடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.