முள்ளிபுரம் – புத்தளம் பகுதியை நோக்கி சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த முதியவர்  ஒருவர் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

 

20200307_123640_compress31புத்தளம் பெரிய பள்ளியிலிருந்து தொழுகைக் கடமையை நிறைவேற்றிவிட்டு மீன்வாடிக்குச் சென்றுவிட்டு பின்னர் வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில், 74 வயதுடைய புத்தளம் பகுதியை சேர்ந்த முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

20200307_123653_compress9959682616_2359056400820686_4514316623041003520_nகுறித்த மோட்டார் சைக்கிளின் சாரதி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதி விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply