தனக்குத் தானே மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ மூட்டிக் கொண்டவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த கதிரவேலு சிவலிங்கம் (வயது 66 )என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோண்டாவில் வடக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பத்தலைவர் இரு நாட்களாக மது போதையிலிருந்துள்ளார். அவரது மனைவி உறவினர்களைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்றுள்ள நிலையில் தனகுதானே மண்ணெண்ணெய்யை ஊற்றி நேற்று இரவு தீ மூட்டிக்கொண்டுள்ளார்.
இதையடுத்து தீக்காயங்களுக்கு உள்ளானவர் அயலவரின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.