ஹெட்­டி­பொல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நுக­செ­வன, புவக்­பிட்­டி­கம எனும் பிர­தே­சத்தில் உள்ள வீடு ஒன்றில் அத்­து­மீறி நுழைந்த நபர் ஒருவர் அவ்­வீட்டில் தனி­மையில் இருந்த பெண் அணிந்­தி­ருந்த தங்கச் சங்­கி­லியை கொள்­ளை­யிட்டுத் தப்பிச் சென்­றுள்­ள­தாக ஹெட்­டி­பொல பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த பெண் நேற்று முன்­தினம் இரவு 8.00 மணி­ய­ளவில் வீட்டில் தனது கணவர் வரும் வரையில் முன் விறாந்­தையில் அமர்ந்து தொலைக்­காட்சி பார்த்துக் கொண்­டி­ருந்­துள்ளார்.

இதன்­போது அப்­பெண்ணின் சகோ­த­ரி­யி­ட­மி­ருந்து வந்த தொலை­பேசி அழைப்­புக்கு பதி­ல­ளித்துக் கொண்­டி­ருந்த போது திடீ­ரென மின்­சா­ரமும் துண்­டிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இச்­சந்­தர்ப்­பத்தில் வீட்டு வாச­லினால் யாரோ வீட்­டினுள் நுழை­வதைக் கண்ட இப்பெண், அது தனது கண­வ­ராக இருக்கும் என நினைத்து, “அக்கா கோல் எடுத்தாள், அவ­ளுடன் பேசிக் கொண்­டி­ருக்­கின்றேன்….” எனத் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு தான் கூறி­ய­தற்கு கண­வ­ரி­ட­மி­ருந்து பதில் எதுவும் வரா­ததால் வீட்­டினுள் நுழைந்­தி­ருப்­பது தனது கணவர் அல்ல என்­பதை ஊகித்துக் கொண்ட அப்பெண் அடிக்­கடி பணம் கேட்டு வரும் பக்­கத்து வீட்டு சகோ­த­ர­னாக இருக்கும் என எண்ணி “தம்பி… ஏன் இந்த நேரத்தில்….?” எனக் கேட்ட போதும் அதற்கும் பதி­ல­ளிக்­காத வீட்­டினுள் நுழைந்த நபர் திடீ­ரென அப்­பெண்ணின் முகத்தை துணி ஒன்றால் மறைத்­து­விட்டு அப்பெண் கழுத்தில் அணிந்­தி­ருந்த தங்கச் சங்­கி­லியை அறுத்­தெ­டுத்துக் கொண்டு தப்பிச் சென்­றுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மின்­சாரம் வந்த பின்னர் தேடிப் பார்த்த போது வீட்டின் பின்­புற கூட்­டி­லி­ருந்த எட்டு புறாக்­களும் காணாமல் போயி­ருந்­துள்­ளது.

பின்னர் இது தொடர்பில் குறித்த பெண் ஹெட்­டி­பொல பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய திரு­டனைக் கைது செய்ய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக ஹெட்­டி­பொல பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply