கொரோனா எனும் கொவிட்-19 வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளாவிய ரீதியில் 6,500 ஐ கடந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை வெளியான தகவல்களின்படி,  உலகில் மொத்தமாக 170,071 பேர்  கொரேனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். இவர்களில் 6525  பேர் உயிரிழந்துள்ளனர். 77,778 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஈரானில் அதிக பாதிப்பையும் உயிர் பலிகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று

 

இத்தாலியில் கொரோனா வைரசுக்கு தினமும் உயிர் பலி அதிகரித்தபடியே இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 368 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1809 ஆக  அதிகரித்துள்ளது,

மேலும் நேற்று புதிதாக 3590 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24747  ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, ஈரானில் கொரோனா வைரஸினால் மேலும்  113  பேர் உயிரிழந்துள்ளனர், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 13,938 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

தென் கொரியாவில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் 8236 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்பெய்னில் மேலும்  96  பேர் உயிரிழந்துள்ளனர் என நேற்று அறிவிக்க்பபட்டது. இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 292  ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெய்னில் 7,753 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸில் கொரோனா வைரஸினால்  இதுவரை  127  பேர் உயிரிழந்துள்ளனர் 5,423 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. ஜேர்மனியில் 11 பேர் இறந்துள்ளனர். 58,131 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 69 பேர் இறந்துள்ளனர். 3,777 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply