வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வட மாகா­ணத்­துக்கு வந்த வெளி­நாட்­ட­வர்­களின் விப­ரங்கள் கொழும்­பி­லி­ருந்து பொலி­ஸா­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்ள நிலையில், அவர்­களை கண்­கா­ணித்து, மருத்­துவ பரி­சோ­தனை செய்­யா­த­வர்­களை பரி­சோ­தனை செய்ய அனுப்பும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

வடக்கு மாகாண பிராந்­திய பொலிஸ் அதி­கா­ரிக்கு வடக்கில் தங்­கி­யி­ருக்கும் வெளி­நாட்­ட­வர்­களின் விப­ரங்கள் கொழும்­பி­லி­ருந்து அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. அதில் எந்த நாட்டில் இருந்து வந்­த­வர்கள் எப்­போது வந்­தார்கள் தொடர்­பான விப­ரங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த விப­ரங்­களின் அடிப்­ப­டையில் பொலிஸார் சுகா­தாரப் பரி­சோ­த­கர்­களின் உத­வி­யுடன் வடக்கில் தங்­கி­யுள்ள வெளி­நாட்­ட­வர்­களை அடை­யாளம் கண்டு அவர்­களை விசா­ரித்து வரு­கின்­றனர்.

இதில் கடந்த இரு வாரங்­களில் வந்­த­வர்கள் மருத்­துவ பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­டி­ருந்­த­னரா என்­பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அவ்­வாறு பரி­சோ­தனை செய்யாதவர்களை வவுனியாவில் உள்ள முகாமுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.” data-id=”sfsi” />

Share.
Leave A Reply