உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இன்று காலை வெளியான தகவல்களின்படி, உலகில் மொத்தமாக 276123 பேர் கொரேனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். இவர்களில் 11.404 பேர் உயிரிழந்துள்ளனர். 91952 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4032 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 47212 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது இவர்களில் 5129பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவில் 7 புதிய மரணங்களும் 41 புதிய தொற்றுகளும் பதிவாகியுள்ளன. அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,255 ஆகும். அந்நாட்டில் மொத்தமாக 81008 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருந்தது. இவர்களில் 71,740 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, ஈரானில் கொரோனா வைரஸினால் மேலும் 149 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 19,644 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 6,745 பேர் குணமடைந்துள்ளனர்
ஸ்பெய்னில் பலியானோர் எண்ணிக்கை 1093 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெய்னில் 21591 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
ஜேர்மனியில் 68 பேர் இறந்துள்ளனர். 19,848 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 264 பேர் இறந்துள்ளனர். அங்கு 19640 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
தென் கொரியாவில் இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் 8,652 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸில் கொரோனா வைரஸினால் 450 பேர் உயிரிழந்துள்ளனர் அங்கு 12,612 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.”