இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என அந்த நாட்டின் மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 நோய் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை துரதிஸ்டவசமாக கவலை தரும் விதத்தில் பெரிதாகி வருகின்றது என மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய்க்குள்ளான சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாள் மாலையிலும் வெளியிடப்படும் அதேவேளை பல மருத்துவர்கள் திடீரென உயிரிழக்கின்றனர் என மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

202003161346132222_Italy-reports-368-coronavirus-deaths-in-24-hours-Latest_SECVPF.gifஅவர்களின் மரணத்திற்கான நேரடி காரணமாக வைரசினை சொல்ல முடியாது என மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உயிரிழந்துள்ள 23 மருத்துவர்களில் 19 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லொம்பார்டியில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 4824 சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply