கடந்த 2013ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் மற்றும் அமலா பால் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தலைவா.

இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இயக்குனர் விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. உடனடியாக இருவரும் திருமணமும் செய்துக்கொண்டனர். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர்.

விவகாரத்திற்கு பின்பு ஏ.எல். விஜய் படம் இயக்கத்திலும் அமலா பால் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தனர். கடந்த வருடம் சொந்தக்காரர்களுக்கு மத்தியில் ஏ.எல்.விஜய் திருமணம் செய்துக்கொண்டார்.

amala-paul_7

இதன்பின் அமலாபால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவர் மீது காதலில் இருக்கிறார் என்று தகவல் பரவியது. ஆனால், அமலாபால் அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாவில் அமாலாபாலுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படத்துடன் ‘Wedding Throwback’ என்று குறிப்பிட்டும் இருந்தார்

ஆனால், புகைப்படங்களை வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார்.

சில மாதங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், இன்று காலைதான் திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

Share.
Leave A Reply