இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத 12 பேர் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் தலைமையகம் சேகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த 12 பேரையும் உடனடியாக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்த பொலிஸார் தேடிவரும் நிலையில், அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பொலிஸார் தேடிவரும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என பொலிஸார் கூறினர்.

Italiஇவ்வாறு பொலிஸார் தேடுவோரில் 6 பெண்கள் 6 ஆண்கள் உள்ளடங்குகின்றனர். எனினும் அதில் 8 பேர் 3 வயது அல்லது அதற்கும் குறைந்த வயதுடைய குழந்தைகளாவர். இருவர் சிறுவர்களாவர்.

இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால், 119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கோ, அல்லது பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகரின் 071-8591864 அல்லது அவரின் கீழ் உள்ள சிறப்பு மத்திய நிலையத்தின் 011-2444480 அல்லது 011-2444481 எனும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

Share.
Leave A Reply