உதை­பந்­தாட்­டத்தின் தீவிர ரசி­கர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது பொது ஆட்­களில் அனே­க­ருக்கும் மிகப் பரீட்­ச­ய­மா­னவர் ரொனால்­டினோ.

பிரே­ஸிலைச் சேர்ந்த ரொனல்­டினோ உலகின் மிகப் பிர­ப­ல­மான கழ­கங்­க­ளான பார்­சி­லோனா, ஏசி மிலன், பாரீஸ் செயிண்ட் ஜேர்மன் ஆகிய கழ­கங்­க­ளுக்­காக ஆடி­யவர்.

தனது நெழிவு சுழி­வான ஆட்­டத்­துக்­கா­கவும் சிகை அலங்­கா­ரத்­துக்­கா­கவும் மிக முக்­கி­யமாய் என்ன நேர்ந்­தாலும் புன்­ன­கைக்­கிற சுபா­வத்­துக்­கவும் அனை­வ­ராலும் நேசிக்­கப்­ப­டு­கி­றவர். நான் அறிய வெறுப்­பா­ளர்கள் இல்­லாத மிகச்­சொற்­ப­மான உதை­பந்­தாட்ட வீரர்­களுள் முக்­கி­ய­மா­னவர்.

 

உலகக் கிண்ணம் , FIFA Ballon’ dor உட்­பட உதை­பந்­தாட்­டத்தின் உய­ரிய விரு­து­களில் ஒன்­று­வி­டாமல் வென்­ற­வரும், பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்னர் உலகில் அதிக சம்­பளம் பெறு­கிற விளை­யாட்­டு­வீ­ரர்­களில் முதன்­மை­யா­ன­வ­ராக இருந்­த­வரும் , மர­டோனா, பீலே , பெக்காம் , ரொனால்டோ வரி­சையில் உதை­பந்­தாட்ட icon ஆக இருந்­த­வ­ரு­மான ரொனால்­டினோ கட­வுச்­சீட்டு மோசடி வழக்கில் தற்­ச­மயம் பரா­குவே சிறையில் இருக்­கிறார் என்­பது எத்­தனை பேருக்கு தெரியும்.

போலி கட­வுச்­சீட்டைப் பயன்­ப­டுத்தி பரா­கு­வேக்குள் நுழைந்தார் என்ற குற்­றச்­சாட்டின் பெயரில் ரொனால்­டி­னோவும் (39) அவ­ரது சகோ­த­ரரும் கடந்­த­வாரம் பரா­கு­வேயில் கைது­செய்­யப்­பட்டு சிறையில் அடைப்­பட்­டுள்­ளனர்.

உலக உதை­பந்­தாட்­டத்தின் அடை­யா­ள­மாக இருக்­கக்­கூ­டிய ஒரு நபர் போலிக் கட­வுச்­சீட்டை பயன்­ப­டுத்­த­வேண்­டிய நோக்கம் ?

அரச அனு­மதி இன்றி தனது ஏரிக்­கரை வீட்டின் பின்­பக்­கமாய் உள்ள ஏரியில் படகைக் கட்­டி­வைப்­ப­தற்­கான பட­கு­நி­றுத்­து­மி­டத்தை (pier) அமைத்தார் என்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் 2.6 மில்­லியன் பவுண்­டு­களும் , இதர தண்­டப்­ப­ண­மாக 1.7 மில்­லியன் பவுண்­டு­க­ளையும் அப­ரா­த­மாக பிரேஸில் அரசு ரொனால்­டி­னோ­வுக்கு விதித்­தது.

ஆனால் இன்­று­வரை அந்த தொகை முழு­வதும் செலுத்­தப்­ப­டாமல் நிலு­வையில் உள்­ளது. இந்த நிலையில் ரொனால்­டி­னோ­வுக்கு சொந்­த­மான 57 சொத்­துக்­களை பிரேசில் அரசு முடக்­கி­யது.

இருந்­த­போதும் சொச்­சமாய் உள்ள தண்­டப்­பணம் குறித்து அலட்­டிக்­கொள்­ளாத ரொனால்­டினோ , உலக சுற்­று­லாக்­களை மேற்­கொண்­டது பிரேஸில் அரசை இன்­னமும் கடுப்­பாக்­கி­யது.

இதன் விளை­வாக 2015 இல் ரொனால்­டி­னோவின் கட­வுச்­சீட்டை முடக்­கி­யது பிரேசில். இதன் பிறகு ரொனால்­டி­னோ­வுக்கு கட­வுச்­சீட்டு வழங்­கப்­பட்­ட­தாக எந்தச் செய்­தி­களும் இல்லை.

இந்த நிலையில் தான் தன்னை யாரும் அடை­யாளம் காண­மாட்­டார்கள் என்ற நினைப்பில் போலி கட­வுச்­சீட்டை பயன்­ப­டுத்தி பரா­கு­வேக்குள் நுழைந்­தி­ருக்­கி­றது இந்த மொக்கு சாம்­பி­ராணி.

சரி அதை­வி­டுவோம். சாதா­ரண ஒரு நப­ருக்கு என்றால் 4 மில்­லியன் பவுண்­டுகள் என்­பது பெரிய தொகை­யாக இருக்­கலாம். ஆனால் சம்­ப­ள­மா­கவும், விரு­து­க­ளா­கவும், விளம்­ப­ரங்கள் மற்றும் அனு­ச­ர­ணை­யா­ளர்கள் மூல­மா­கவும் மில்­லி­யன்கள் கணக்கில் சம்­பா­தித்த உதை­பந்­தாட்ட ஜாம்­பவான் ஒரு­வ­ருக்கு அந்த தொகையை எப்­படி கட்ட முடி­யாமல் போயி­ருக்கும் ?

உண்­மையைச் சொல்­லப்­போனால் , Ronaldhino is BROKE. வாழ்ந்து கெட்ட ஜமீன் கணக்காய் , ஏது­மற்று வங்­கு­ரோத்­தா­கி­விட்டார் ரொனால்­டினோ.

காரணம் ?

2003 இல் பார்­சி­லோனா ரொனால்­டி­னோவை வாங்கும் பொழுது ரொனால்­டி­னோ­வுக்கு வயது 23. பார்­சி­லோனா வர­லாற்றில் எட்­டப்­பட்ட மகத்­தான சாத­னைகள் பலவும் ரொனால்­டினோ பார்­சி­லோ­னாவில் விளை­யா­டிய காலத்தில் நிகழ்த்­தப்­பட்­டன.

லா லீகா, சம்­பியன்ஸ் லீக் , club world cup , copa del ray , super copa , Ballon dor , என்று அத்­தனை கோப்­பை­க­ளையும் விரு­து­க­ளையும் வாங்கிக் குவித்தார் ரொனால்­டினோ.

ரொனால்­டினோ ஆடிய பார்­சி­னோனா உலகின் தலை சிறந்த கழகம் என்று புக­ழாரம் சூட்­டப்­பட்­டது. காரணம் ரொனால்­டினோ. இப்­போது லியனல் மெஸ்­ஸியை எப்­படி பார்­சி­லோனா ரகி­ர­களும் உலக உதை­பந்­தாட்ட ரசி­கர்­களும் கொண்­டா­டு­கி­றார்­களோ அப்­படி அன்­றைய நாட்­களில் ஆரா­திக்­கப்­பட்­டவர் ரொனால்­டினோ.

ஆனால் இரு­பத்தி எட்டே வய­தான ரொனால்­டி­னோவை அதுவும் அன்­றைய தேதியில் உலகின் ஒப்­பற்ற வீர­ராக இருந்த ஒரு­வரை ஏசி மிலன் கழ­கத்­திற்கு பார்­சி­லோனா விற்­றது உலக உதை­பந்­தாட்ட அரங்கில் பெரிய அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது. இப்­போது லியனல் மெஸ்­ஸியை பார்­சி­லோனா விற்றால் எப்­ப­டி­யி­ருக்கும் ?

அதுவும் வெறும் இரு­பத்தி எட்டே வயதில். உதை­பந்­தாட்­டத்தை பொறுத்­த­வ­ரையில் ஒரு வீரரின் peak time எனப்­ப­டு­வதே 27- 32 வயது தான்.

அப்­ப­டி­யி­ருக்க , ஒரு அதி அற்­பு­த­மான வீரரை இரு­பத்தி எட்டே வயதில் பார்­சி­லோனா விற்க காரணம் என்ன ?

ரொனால்­டி­னோவின் இரவு வாழ்க்கை, பொது­வா­கவே பிரேஸில் வீரர்கள் மது மற்றும் கேளிக்கைப் பிரி­யர்கள். குடித்துக் கொண்­டா­டு­வ­திலும் , இரவு விடு­தி­களில் கிடையாய் கிடந்து நாச­ம­றுந்து போவ­தற்கும் பெயர் போன­வர்கள்.

அடுத்த பீலே என்று புக­ழாரம் சூட்­டப்­பட்­ட­வரும், இரு­பத்தி ஒரு வயதில் ரியல் மட்ரிட் அணிக்­காக ஆட ஒப்­பந்தம் செய்­யப்­பட்­ட­வ­ரு­மான ரொபி­னி­யோவும், ரொனால்­டோவின் பிரதி என்று சிலா­கிக்­கப்­பட்­ட­வரும் தனது இரு­பத்தி இரண்டு வயது வரை இத்­தா­லிய கழ­க­மான இண்டர் மிலானின் இளம் நட்­சத்­தி­ர­மா­கவும் இருந்த அண்ட்­றி­யா­னோவும் கெட்டு குட்­டிச்­சு­வராய் போன­தற்கு காரணம் குடியும் கூத்தும்.

ronaldinho-2

பார்­சி­னோ­லாவில் ஆடிக்­கொண்­டி­ருந்­த­போது தேக ஆரோக்­கி­யத்­து­டனும் நல்ல பிள்­ளை­யா­கவும் ஆடிக்­கொண்­டி­ருந்த நெய்மார் , பாரீஸ் செயிண்ட் ஜேர்­மனில் அடிக்­கடி உடல் உபா­தைக்கு உள்­ளா­கவும் காரணம் கட்­டுப்­பா­டற்ற இரவு வாழ்க்கை. நெய்மார் பார்­சி­லோ­னா­வுக்­காக ஆடிய போது விசேட அதி­கா­ரிகள் மூலம் நெய்மார் கண்­கா­ணிக்­கப்­பட்டார்.

நெய்மார் தன் பிரேஸில் டீ,என்,ஏவில் உள்­ளது போல ஒரு பார்ட்டி எனிமல் (party Animal )ஆகி­வி­டாமல் தடுக்க பார்­சி­லோனா சகல ஏற்­பா­டு­க­ளையும் செய்­தது.

ஆனால் பாரிஸில் நெய்மார் கேள்வி கேட்பார் இல்­லாத காளை. ரொனால்­டினோ மட்­டிலும் இதை பார்­சி­லோனா இதைச் செய்­தது.

ஆனால் சிறிது காலத்தில் ரொனால்­டினோ ஒரு சூப்பர் ஸ்டாராக ஆனதன் பிற்­பாடு ஒரு கட்­டத்­திற்கு மேல் பார்­சி­னோ­னாவால் ரொனால்­டி­னோவை கட்­டுப்­படுத்த் முடி­யாத நிலை இருந்­தது.

ஆனாலும் தன் சக்­திக்கு உட்­பட்ட அத்­தனை முறை­யிலும் பார்­சி­லோனா ரொனால்­டி­னோவை தன் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருந்­தது.

ரொனால்­டி­னோ­வுக்கு இரு­பத்­தைத்து இரு­பத்­தாறு வய­தா­கிற போது சிறுவன் மெஸ்ஸி பார்­சி­லோனா அணிக்குள் வரு­கிறான். வந்த சொற்ப நாட்­க­ளுக்குள் ரொனால்­டி­னோவின் நண்­ப­னா­கவும் மாண­வ­னா­கவும் ஆகிப் போகிறான்.

” He is more than a team mate. He is my teacher and mentor ” என்று மெஸ்ஸி குறிப்­பட்­டதை இவ்­வி­டத்தில் சொல்ல வேண்டும். நாட்கள் நகர நகர லியனல் மெஸ்ஸி என்னும் உதை­பந்­தாட்ட ராட்­ச­சனை கண்­டு­கொள்­கி­றது பார்­சி­லோனா.

அடுத்த பத்துப் பதி­னைந்து ஆண்­டு­க­ளுக்கு உதை­பந்­தாட்ட உலகை தாங்கள் ஆளு­வ­தற்­கு­ரிய ஆளை பார்­சி­லோனா கண்­டு­பி­டிக்­கி­றது. மெஸ்­ஸியும் – ரொனால்­டி­னோவும் என்று நினைக்­கவே பார்­சி­லோனா ரசி­கர்­க­ளுக்கும் , நிர்­வா­கத்­துக்கும் தலைகால் புரி­யாத சந்­தோசம் தலையில் ஏறி போதை­யேற்­று­கி­றது.

இந்த நிலையில் இரு­பத்தி ஏழு மற்றும் எட்­டா­வது வயதில் ரொனால்­டி­னோவின் மது மற்றும் இரவு விடுதிப் பழக்கம் எல்லை மீறிப் போகி­றது.

காலை பயிற்­சி­களின் போது தெளி­யாத போதை­யுடன் வரத்­தொ­டங்­கினார் ரொனால்­டினோ. இர­வி­ரவாய் குடித்­துக்­கொண்­டா­டி­விட்டு அடிக்­கடி பயிற்­சி­க­ளுக்கு விடுப்பு எடுக்க ஆரம்­பிக்­கிறார்.

ரொனால்­டினோ பயிற்­சிக்கு வர­வில்லை அல்­லது போதையில் வரு­கிறார் என்­பதை விட இந்த பழக்­கங்­களில் இருந்து ரொனால்­டி­னோவின் மாண­வ­னான மெஸ்­ஸியை ” பாது­காக்க ” வேண்­டிய கட்­டாயம் இருப்­பதை பார்­சி­லோனா உண­ரு­கி­றது.

Paraguay_Brazil_Ronaldinhoஆக, சிறுவன் மெஸ்­ஸியை பாது­காக்கும் பொருட்டு ரொனால்­டி­னோ­வையும் , மெஸ்­ஸியின் இன்­னொரு நண்­பரும் ரொனால்­டி­னோவின் குடிக் கூட்­டா­ளி­யு­மான டீகோ­வையும் 2008 இல் விற்­கி­றது பார்­சி­லோனா. ஆனாலும் இந்த நிமிடம் வரையில் பார்­சி­லோ­னா­வுக்கும் ரொனால்­டி­னோ­வுக்கும் எந்த மனக்­க­சப்பும் கிடை­யாது.

இன்­றைக்கும் பார்­சி­லோனா ரசி­கர்கள் மட்­டிலும் , நிர்­வாகம் மட்­டிலும் ரொனால்­டினோ ஒரு மரி­யா­தைக்­கு­ரிய லெஜண்ட். அந்த நேரத்தில் எடுக்­கப்­பட்ட முடிவு காலத்தின் தேவை என்ற புரிதல் இரண்டு தரப்­புக்கும் இருக்­கி­றது.

பார்­சி­லோ­னாவில் இருந்து இத்­தா­லியின் ஏசி மில­னுக்கு போகிறார் ரொனால்­டினோ. உதை­பாந்த ஐகான். லெஜண்ட். அன்­றைய தேதியின் உச்ச நட்­சத்­திரம்.

இவை அத்­த­னையும் சேர்ந்து ஏசி மிலனின் கைகளை கட்­டிப்­போட , கட்­டுக்­க­டங்­காத சுதந்­தி­ரத்தை அனு­ப­வித்தார் ரொனால்­டினோ. குடி , பார்ட்டி, போதை, இரவு விடு­திகள், bunk the practice , Repeat …..

விளைவு , பார்­சி­லோ­னாவை விட்டு நீங்­கி­யதில் இருந்து ரொனால்­டி­னோவால் தனது பழைய சிறப்­பான ஆட்­டத்­துக்கு எப்­போதும் வர முடி­ய­வில்லை.

Peak years என்று சொல்­லப்­ப­டக்­கூ­டிய 28,29,30 ஆவது வய­து­களில் 76 போட்­டி­களை இண்டர் மில­னுக்­காக ஆடிய ரொனால்­டி­னோவால் வெறும் இரு­பது கோல்­களை மட்­டுமே போட முடிந்­தது. ஆட்­டத்­திலும் பழைய சுறு­சு­றுப்போ , நெழிவு சுழி­வு­களோ வேகமோ இல்லை.

சரா­சரி வீரர்கள் கூட தமது 30-35 வது வயது வரை ஐரோப்­பாவின் முன்­னணி கழ­கங்­க­ளுக்கு ஆடி­கொண்­டி­ருக்­கிற நிலையில் , உலகின் மிகச்­சி­றந்த வீரர் என்று அறி­யப்­பட்ட்ட ஒரு­வரை , அவ­ரது முப்­ப­தா­வது வயதில் பிரேசில் கழ­க­மான ஃபிள­மிங்­கோ­விற்கு விற்­கி­றது ஏசி மிலன்.

உலக உதை­பந்­தாட்­டத்தைப் பொறுத்­த­வரை நீங்கள் உலகின் எப்­ப­கு­தி­யிலும் இருந்து ஐரோப்­பிய கழகம் ஒன்­றிற்கு ( குறிப்பாய் ஸ்பெயின் , இங்­கி­லாந்து , ஜேர்­மனி, இத்­தாலி ) விற்­கப்­ப­டு­கி­றீர்கள் என்றால் அது உங்­க­ளது ஏறு­முகம். இதுவே ஐரோப்­பிய கண்­டத்தில் ஆடி­விட்டு ,பிறகு ஐரோப்­பா­விற்கு வெளியே விற்­கப்­ப­டு­கி­றீர்கள் என்றால் அது இறங்­கு­முகம்.

உதை­பந்­தாட்ட வீரர்கள் தங்கள் வாழ்வின் அற்­பு­த­மான form இல் இருக்­கக்­கூ­டிய வய­தான 30 இல் ரொனால்­டினோ என்ற சகாப்­தத்தின் இறங்­கு­முகம் ஆரம்­பித்­து­வி­டு­கி­றது.

ரொனால்­டி­னோவின் சம­வ­யதை ஒத்த வீரர்கள் தங்­க­ளது 30+ வய­து­களில் ஐரோப்­பாவின் முன்­னணி கழ­கங்­களில் ஆடிக்­கொண்­டி­ருக்க ரொனால்­டினோ பிரேசில் மைதா­னங்­களில் தனது சொந்த மக்கள் முன்­னி­லையில் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்தார்.

 

எது எப்­படி ஆனாலும் மது , போதை மற்றும் களி­யாட்­டங்கள் மீதி­ருந்த ரொனால்­டி­னோவின் காதல் குறைந்­த­பா­டில்லை. உல­கெங்கும் அலைந்து அலைந்து களி­யாட்டம் போட்டார்.

குடி­யிலும், போதை­யிலும் இரவு விடு­தி­களில் கிடந்தார். உடல் தனது தகு­தியை இழந்­தது. முப்­பத்தி ஐந்து வய­துக்­குள்­ளா­கவே ஐம்­பது வயது ஆட்­களைப் போல ஆகிப்­போனார். பணமும் , திற­மையும் மக்கி பழைய லெகசி மட்டும் கூட ஒட்டிக்கொண்டு நின்றது.

விட்டகுறை தொட்டகுறையாக வழக்குகளும், தண்டப்பணங்களும் வந்து சொத்தை அழித்து ஓய பிரேசில் அரசு பாஸ்போர்ட்டை முடக்கியது. விளைவு, புதிய ஒரு தொழிலைத் தொடங்குவதற்காக பராகுவே நாட்டிற்குள் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நுழைந்து சிறையில் இருக்கிறார்.

இந்த நிலையில் தனது முன்னாள் அணி வீரரும் ஆசா­னு­மானா ரொனால்­டி­னோவை பிணையில் விடு­தலை செய்­யவும் , பிரே­ஸிலில் அவ­ருக்கு இருக்க கூடிய கடன் தொகை­யான 4 மில்­லியன் பவுண்­டு­களைச் செலுத்­தவும் லியனல் மெஸ்ஸி வழக்­க­றி­ஞர்­களை நிய­மித்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கின, ஆனால் மெஸ்ஸி அதை மறுத்­துள்ளார் எனவும் செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

எப்­படி இருந்த ஒரு வீரன் ஒழுங்­கற்ற வாழ்க்கைப் பழக்­கத்தால் இப்­படி ஆகி­விட்­டானே என்று மெசேஜ் சொல்­லலாம் என்று நான் தட்­டச்­சு­கிற இடை­வெ­ளியில் , பரா­குவே சிறையில் கைதிகள் முண்­டி­ய­டித்­துக்­கொண்டு ரொனால்­டி­னோ­விடம் கையொப்பம் வாங்­கு­கிற படங்­களும் வீடி­யோக்­களும் வந்து சேர்கின்றன.கெட்டாலும் மேன்மக்கள்.

-Kishoker Stanislas

 

Share.
Leave A Reply