சுவிற்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே காப்பாற்றினர்.

இதனால் இங்கு கொரோனா பரவப் பொலிஸாரே காரணம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ்.

indexஊடகவியலாளர்களை இன்று சந்தித்தபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரைத் தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பாதுகாத்தவர்கள் பொலிஸாரே.

பொலிஸார் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை அச்சுறுத்தியமை தொடர்பாகவும் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். இதனடிப்படையில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Share.
Leave A Reply