ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தற்கொலை தாக்குதல்தாரியை அழைத்துச் சென்று வழிநடத்தியதாகக் கூறப்படும் முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சியோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்திருந்ததுடன், 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.