சிலாபம், நாத்தாண்டியா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் நேற்றைய தினம் கொரோனா தொற்று தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

1418915098ஐந்து பேர் கொண்ட இக் குடும்பத்தில் நான்கு மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுகாதார துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுட்டிக்கட்டினார்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 127 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply