உலகை தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால், உலக அளவில் இதுவரை 7,22,289 பேர் பாதிப்படைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது வரை உலக அளவில் 34,005 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் தான் மிக அதிகமாக 10,779 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் 6803 பேரும், சீனாவில் 3308 பேரும், இரானில் 2640 பேரும், பிரான்ஸில் 2611 பேரும் இறந்துள்ளனர்.
அதேவேளையில், தற்போது அதிக பாதிப்புகளை சந்தித்துவரும் அமெரிக்காவில் 2493 பேரும், பிரிட்டனில் 1231 பேரும், ஜெர்மனியில் 541 பேரும், நெதர்லாந்தில் 772 பேரும், பெல்ஜியத்தில் 431 பேரும் உயிரிழந்துள்ளனர்