சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அங்குள்ள இறைச்சி சந்தைகளில் தேள், முயல், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

சீனாவில் பாம்பு, பூனை, வவ்வால்களின் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள இறைச்சி சந்தையில் இருந்து தான் கடந்த டிசம்பர் மாதம் வைரஸ் பரவியது. இந்த சந்தையில் இறால் விற்கும் பெண் ஒருவர் தான் உலகின் முதல் கொரோனா நோயாளி என தெரிய வந்துள்ளது.

கடந்த 3 மாதங்களாக சீனாவை உலுக்கிய இந்த வைரஸ் தற்போது மற்ற நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து வகையான போக்குவரத்தும் அடியோடு முடங்கி உள்ளது.

202003311332538682_Tamil_News_Chinese-Markets-Reopen-Selling-Bats-Dogs-and-Cats_SECVPF.gifஅதே நேரம் சீனாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஹூபே மாகாணமும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் வுகான் நகரில் சாலை போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து சீனாவில் மீண்டும் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

குயிலின் மற்றும் டாங்குவான் பகுதிகளில் உள்ள ஒரு இறைச்சி சந்தைகளில் நாய், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு வழங்கப்பட்டன. பாரம்பரிய மருந்தாக கருதப்படும் வவ்வால், தேள், முயல் மற்றும் தோல் உரிக்கப்பட்ட வாத்துகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Share.
Leave A Reply