வேறு மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட தொழிலிற்காக இடம்பெயர்ந்து சென்றவர்கள்  மீது  தொற்றுநீக்கிகள் தெளிக்கப்படுவதை காண்பிக்கும் அதிர்ச்சி வீடியோஇந்தியாவில் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு கவசங்களை அணிந்தவர்கள் உங்கள் கண்களையும் உங்கள் பிள்ளைகளின் கண்களையும் மூடிக்கொள்ளுங்கள் என உத்தரவிட்ட பின்னர் நிலத்தில் அமர்ந்திருப்பவர்கள் மீது தொற்றுநீக்கிகளை தெளிப்பதை வீடியோ காண்பித்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் பரெய்லியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விசேட பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட தொழிலிற்காக வேறு மாநிலங்களிற்கு சென்றவர்கள் மீது  தொற்றுநீக்கிகள் தெளிக்கப்படுவதையும் காவல்துறையினர் அங்கு காணப்படுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.

india_disfentactகுறிப்பிட்ட வீடியோ வெளியானதை தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் குளோரினை தண்ணீருடன் கலந்து தெளித்ததாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் இரசாயனங்கள் எவற்றையும் பயன்படுத்தவில்லை, நாங்கள் மனிதாபிமானமில்லாமல் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

நாங்கள் அவர்களை கண்களை மூடுமாறு தெரிவித்து விட்டே அவற்றை தெளித்தோம்,அனைவரையும் சுத்தம் செய்வது அவசியம் மிகப்பெரும் எண்ணிக்கையிலானவர்கள் திரும்பி வந்துள்ளதால் இதுவே சிறந்த செயல் என நினைத்தோம் என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply