கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட ஆனால் தொற்றினை வெளிப்படுத்தாதவர்களில் 25 முதல் 50 வீதமானவர்கள் ஏனையவர்களிற்கு நோய்களை பரப்புவார்கள் என்பது மேலும் பல ஆய்வுகள் மூலம் உறுதியாகியுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

நோய் தொற்றிற்கான அறிகுறியை வெளிப்படுத்தாதவர்களே அதிகளவிற்கு நோயை பரப்புகின்றனர் என்பதை உறுதி செய்யும் மேலும் பல புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் முகக்கவசங்களை அணியவேண்டுமா என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் தற்போது மீள சிந்திக்க ஆரம்பித்துள்ளனர் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஸ்லாந்திலிருந்து வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என உறுதிசெய்யப்பட்டவர்களில் 50 வீதமானவர்கள் அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என்பதை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது.

73787942அமெரிக்காவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 25 வீதமானவர்கள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான நிலையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானர்வர்கள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாத நிலையி;ல் உள்ளனர் என்பது குறித்த உறுதியான தரவுகள் உள்ளன என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான நிலையத்தின் இயக்குநர் ரொபேர்ட் ரெட்பீல்ட்  தெரிவித்துள்ளார். இவர்களின் எண்ணிக்கை 25 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply