இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அவரின் மனைவியான நடிகை அனுஷ்கா சர்மான முடி வெட்டி விடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியா முழுவதும்; 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் வெளியே வரக்கூடாது என்பதால் மக்கள் தங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருகின்றனர்.

புpரபலங்கள் பலரும் தமது ரசிகர்கள், விசிறிகளை வீடுகளிலிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்துவதுடன், தம்மைத் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் (quarantine) தமது வீட்டு வேலைகள் முதலான செயற்பாடுகள் குறித்த விபரங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகி;ன்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியும் தற்போது வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளர். அவருக்கு அவரின் மனைவியான பிரபல பொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மா முடி வெட்டி விடுகிறார்.

இதன்போது பதிவான வீடியோவை அனுஷ்கா சர்மா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். Meanwhile, in quarantine..  என்ற குறிப்புடன் இவ்வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

வீடியோ

Share.
Leave A Reply