கொரோனா வைரஸ் காரணமாக மனக்குழப்பத்திலிருந்த நபா ஒருவர் தனது காதலி மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பென்சில்வேனியாவை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் கொரோனவைரஸ்; குறித்தும் வேலையை இழந்தமை குறித்தும் மன உளைச்சலிற்கு உள்ளாகியிருந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நான் ஏற்கனவே கடவுளிடம் இது குறித்து பேசியுள்ளேன் இதனை செய்யவேண்டும் என அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் காதலி தப்பியோட முயன்றவேளை அவரது முதுகில் சுட்ட பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முன்னர் மீகன் கொரோனா வைரஸ் குறித்து கடுமையான மனஉளைச்சலிற்கு உள்ளாகியிருந்தார் என காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோக சம்பவத்திற்கு முன்னர் அவர் வைரஸ்குறித்தும் வேலை பறிபோனது குறித்தும் கடும்மன உளைச்சலில் காணப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.