சீனாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 76,238 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளதாக அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக நேற்று செவ்வாய்க்கிழமை 186 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் மகிழ்ச்சியுடன் வைத்தியசாலையிலிருந்து வெளியே புகைப்படங்களை சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா புதன்கிழமை பகிர்ந்துள்ளது.

EUfojp8UEAEiktWஇதேவேளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க ஹூபேக்கு அனுப்பப்பட்ட மருத்துவர்கள் குழுவும் அங்கிருந்து புறப்பட்டு, அவர்களது குடும்பத்தினருடன் ஒன்றிணைவதற்கு தயாராவுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மருத்துவக் குழுவானது 7 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் அதில், 700 பேர் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply