கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் தந்தை ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
மல்வத்துஹிரிபிட்டிய பகுதியை சேர்ந்த, 37 வயதுடைய தந்தை 28 வயதுடைய தனது மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததுடன் 3 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.