கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 4 நாட்களாக ஸ்பெயினில் உயிரிழப்புகள் குறைந்த வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 743 பேர் இறந்துள்ளதாக, அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 13,798 இறந்துள்ளதாக ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் திங்கள்கிழமையன்று 637 மரணங்கள் பதிவான நிலையில், கடந்த 2 வாரங்களில் ஸ்பெயினில் பதிவாகியுள்ள குறைந்த அளவு மரணங்கள் இதுதான் என்று கூறப்பட்டது.

ஸ்பெயினில் இதுவரை 1,40,000க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் தான் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

6fbb805e-cd8d-4ef9-9df2-b8bef35637f9முக்கிய சாராம்சம்

இந்திய நேரப்படி செவ்வாய் காலை 10.53 மணி நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 13,47,892 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களில் 74,816 பேர் உயிரிழந்துள்ளனர். 2,84,802 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலக நாடு ஒன்றின் அரசுக்கு தலைமை தாங்குபவர்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 3,68,376 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக இத்தாலியில் 16,523 பேர் இறந்துள்ளனர்; ஸ்பெயினில் 13,341 பேர் இறந்துள்ளனர்.
ஜனவரி மாதம் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கோவிட்-19 தொற்றால் உண்டான மரணங்கள் குறித்த விவரங்களை வெளியிடத் தொடங்கியது முதல், கொரோனா வைரஸ் காரணமாக மரணம் நிகழாத முதல் நாளாக நேற்று (திங்கள்கிழமை) உள்ளது.

மோசமான அளவில் இறப்புகளைச் சந்தித்த இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் புதிதாக கோவிட்-18 தொற்று உண்டாகும் விகிதம் குறைந்துள்ளது.

உலகிலேயே முதல் முறையாகப் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply