இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 4,289 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக போராட தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு  ஆரம்பமகி 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விளக்குகளை ஏற்றுமாறு நாட்டு மக்களிடம் இந்தியப் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையின்படி நாட்டு மக்கள் மின்விளக்கை அணைத்து விளக்கேற்றினர்.

தீவிரத்தை உணராத சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.  இந்நிலையில், ஒற்றுமை விளக்கேற்றும் நிகழ்வை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்ட பாஜக மகளிர் அணித் தலைவி மஞ்சு திவாரி கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு அந்தக் காட்சியை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.  அந்த வீடியோவை அவரே தனது பேஸ்புக் பக்கத்திலும்  பகிர்ந்துள்ளார்.

 

Share.
Leave A Reply