இந்த சூழ்நிலையில், சினிமாத் துறையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் பலரும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு சினிமாத் துறையைச் சார்ந்த பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
பல நடிகர்கள் உதவி செய்திருந்த நிலையில், நடிகர் விஜயும், அஜித்தும் நிதியுதவி வழங்க முன்வரவில்லை எனப் பலரும் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் பிரதமர் நிவாரண நிதிக்கு ஐம்பது லட்ச ரூபாயையும், முதல்வர் நிவாரண நிதிக்கு ஐம்பது லட்ச ரூபாயையும் நிதியுதவியாக அளித்திருக்கிறார். மேலும், ஃபெப்ஸி ஊழியர்களுக்கு இருபத்தி ஐந்து லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெப்ஸி ஊழியர்களுக்காக பத்து லட்சம் ரூபாயும், முதல்வர் நிவாரண நிதிக்கு இருபத்தி ஐந்து லட்சம் ரூபாயையும் வழங்கியிருந்தார்.
முன்னதாக நடிகர் சிவக்குமார் தன்னுடைய குடும்பத்தினர் சார்பாக பத்து லட்சம் ரூபாயை ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக வழங்கியிருந்தார். நடிகர் ரஜினிகாந்த் ஐம்பது லட்சம் ரூபாய் அளித்திருந்தார்.