உலகையே உலுக்கிவரும் கொரோனாவின் கோரதாண்டவத்தால், இதுவரை உலகளவில், மொத்தம் 1,14,179 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளாகி, 1528 பேர் பலியாகி உள்ளதோடு, அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22,105 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு, உலகளாவிய ரீதியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை 18,51,734 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எண்ணிக்கை 4,23,286.

 

இந்நிலையில், அமெரிக்காவில்தான் மிக அதிக அளவு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இத்தாலியில் ஒரே நாளில் 431 பேர் உயிரிழந்த நிலையில் அந்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 19,899 ஆக அதிகரித்தது.

இங்கிலாந்தில் ஒரே நாளில் 737 பேர் நேற்று மரணமடைந்தனர். அங்கு மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 10,612. ஸ்பெயினில் ஒரே நாளில் 603 பேர் மரணமடைந்ததால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 17,209 ஆக அதிகரித்தது

பிரான்ஸில் ஒரே நாளில் 561 பேர் பலியாகினர். அங்கு மொத்தம் 14,393 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியில் ஒரே நாளில் 151 பேர் பலியானதால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,022 ஆகவும், பெல்ஜியத்தில் 254 பேர் நேற்று பலியாகினர். அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 3,600 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், ஈரானில் 4,474 பேரும், ஜெர்மனியில் 3,022 பேரும்,பெல்ஜியத்தில் 3,600 பேரும் கொரோனா தொற்று நோயால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Share.
Leave A Reply