முழு உலகையே நிலைகுலையச் செய்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக,  அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் நேற்று (16.04.2020) ஒரே நாளில் 2,137 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்திருக்கின்றனர். அங்கு மொத்த பலி எண்ணிக்கை 34,617 ஆக உயர்வடைந்துள்ளது.

 

உலக நாடுகளில் கொரோனாவால் மிக மோசமான பேரழிவை சந்தித்து வருகிறது அமெரிக்காவாகும்.  இதுவரை இங்கு மொத்தம் 6,77,570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் சுமார் 2,000க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் கொரோனாவால் பலியாகி வருகின்ற நிலையில் நேற்று ஒரே நாளில் 2137 பேர் மரணித்துள்ளனர்.

 

மிக மோசமாக நியூயோர்க்  நகரில் தான் 16,106 பேர் பலியாகியுள்ளனர். இங்கு மட்டும் 2,26,198 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 22,170 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஸ்பெயினில் 19,315 பேரும் பிரான்ஸில் 17,920 பேரும் கொரோனா காவு கொண்டுள்ளது. இங்கிலாந்தில் 13,729 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

அத்தோடு,  ஈரானில் 4,869, ஜெர்மனியில் 4,052, பெல்ஜியத்தில் 4,857 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1,45,507 ஆகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,81,758 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply