நடிகர் விக்ரம் தற்போது ‘இமைக்கா நொடிகள்’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் 58வது படமான இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

7 ஸ்கீரின் ஸ்டுடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக KGF பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். சிவகுமார் விஜயன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மிருனாளினி ரவி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.நடிகர் விக்ரம் தற்போது ‘இமைக்கா நொடிகள்’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் 58வது படமான இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இன்று நடிகர் விக்ரமின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் காமன் டிபி பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ( ஏப்ரல் 17 ) ஸ்பெஷல் வீடியோ காலை 8 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவித்தார்.

அதன் படி தற்போது வெளியான வீடியோவில் பிரபலங்கள் தங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதில் குறிப்பாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ ஷங்கர், இயக்குநர் அஜய் ஞானமுத்து, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் உள்ளிட்ட கோப்ரா பட டீம் வாழத்துகள் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply