கொரோனா வைரஸ் தாக்குதலால், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், போன்றே இங்கிலாந்திலும் அதிகமான உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. இதில், முதியோர் இல்லங்களில் இருந்த பல முதியவர்களும் உயிரிழந்துள்ளனர்.

மேற்கூறிய நாடுகளில், இதுபோன்ற இல்லங்களில் வசித்த சுமார் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையிலான முதியவர்கள் உரிய சிகிச்சை கிடைக்காமலும், போதிய கவனிப்பும் இன்றி கொரோனாவுக்கு தங்கள் உயிரை பறிகொடுத்து உள்ளனர்.

இங்கிலாந்தில் முதியோர் இல்லங்களில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு 7,500 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் முதியோர் இல்லங்களில் இந்த வார ஆரம்பத்தில் 1,400 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டதாக அதிகாரபூர்வ புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

ஏப்ரல் 3 வரை  217 முதியோர் பராமரிப்பு இல்லங்களில் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏப்ரல் 15 ஆம் திகதி நிலவரப்படி, இங்கிலாந்தில்  3,084  முதியோர் இல்லங்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இதுவரை 108,692 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு,   14,576 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply