நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 295ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது 24 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் மாத்திரம் 17 கொரோனா தொற்று உறுதியானவர்கள் இனங் கணப்பட்டிருந்தனர்.

அவர்களில் இரண்டு பேர் கிராண்ட்பாஸ் மற்றும் கொழும்பு 12 தோமஸ் ஒழுங்கை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் கொழும்பு – வாழைத்தோட்டம் – பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் எனவும் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

புறக்கோட்டை – வாழைத்தோட்;டம் பண்டாரநாயக்க மாவத்தை 146 இலக்க தோட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் கொரோனா தொற்றுறுதியானவர்கள் என 25 பேர் இனங் காணப்பட்டிருந்ததாகவும் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

Share.
Leave A Reply