>கொரேனா வைரஸ் ஆய்வு கூடத்திலிருந்து பரவியது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் விலங்குகளில் இருந்தே வைரஸ் பரவியிருக்கலாம் என தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள அனைத்து ஆதாரங்களும் கடந்த வருட இறுதியில் சீனாவில் வெளவாலில் இருந்தே வைரஸ் பரவியது என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் படெலா சைப் இன்று இதனை தெரிவித்துள்ளார்.
வைரஸ் விலங்கிலிருந்தே பரவியது என்பதனையே கிடைக்கின்ற அனைத்து ஆதாரங்களும் புலப்படுத்துகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வு கூடம் எதிலும் உருவாக்கப்பட்ட அல்லது சிலரால் தங்களின் தேவைகளிற்காக தங்களிற்கு சாதகமான விதத்தில் பயன்படுத்தப்பட்ட வைரஸ் இல்லை இது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் எப்படி மனிதர்களிற்கு பரவியது என்பது தெரியவில்லை,ஆனால் நிச்சயமாக விலங்கொன்றின்தொடர்பிருந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.