கொழும்பு – 12 பண்டாரநாயக்க பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – 12 கொட்டாஞ்சேனை பிரிவுக்குட் உட்பட்ட வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு பகுதியின் எல்லையான பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள 242 குடும்பங்களைr் சேர்ந்த 1,010 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களுளக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று மட்டும் பண்டாரநாயக்க மாவத்தையில்  32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இத்துடன் இன்று மேலும் 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாயம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை,பண்டாரநாயக்க மாவத்தை  பகுதியில் மட்டும் மொத்தமாக 62 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த பகுதியில்  வசித்த 242 குடும்பங்களை சேர்ந்த 1,010 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply