பங்களாதேஷில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இஸ்லாமிய மதபோதகரின் இறுதி ஊர்வலத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த உத்தரவை மீறி பிரம்மன்பரியா மாவட்டத்தில் மதபோதகர் மவுலானா சுபாயர் அஹ்மத் அன்சாரியின் (Maulana Zubayer Ahmad Ansari) இறுதிச் சடங்கில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வெள்ளமெனத் திரண்ட மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது.