இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் மே மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையிட்டு, பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசேட பயணிகள் சேவையும் அத்தியாவசிய சேவையும் மாத்திரம் முன்னெடுக்கப்படுமென, இலங்கை விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களை 940117771979 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply