உலகையே உலுக்கியுள்ள கொவிட் 19 எனும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்று முன்பு இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது.
இதற்கமைய இலங்கை நேரப்படி இரவு 10 மணியளவில் உலகளாவிய ரீதியில் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 200,569 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,871,247 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823,306 ஆகவும் உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் இது வரை பதிவான உயிரிழப்புகளில் பிரித்தானியாவில் அதிகமான உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அங்கு இன்றைய தினம் இதுவரை 813 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பிரித்தானியாவின் உயிரிழப்பு 20,319 ஐ எட்டியுள்ளது.
அத்துடன் அதிகூடிய புதிய தொற்றாளர்கள் ரஸ்யாவில் பதிவாகியுள்ளனர். அங்கு இன்றைய தினம் இதுவரை 5,966 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.