உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் இன்னொரு கட்டமாக கியூபா, 216 சுகாதாரப் பணியாளர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து உலகளவில் அனுப்பிய 20இற்குக்கும் மேற்பட்ட மருத்துவ படைப்பிரிவுகளில் இது சமீபத்தியது.
எனினும், இதனை 90 சதவீதமான மக்கள் வரவேற்றுள்ள நிலையில், இதனை சிலர் சோசலிச ஒற்றுமை என்றும் மற்றவர்கள் மருத்துவ இராஜதந்திரம் என்றும் அழைக்கின்றனர்.
இதுவரை, கம்யூனிஸ்டுகளால் இயங்கும் நாடு சுமார் 1,200 சுகாதாரப் பணியாளர்களை பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடிய ஆபிரிக்க மற்றும் கரீபியன் நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.
தடுப்பு, சமூகம் சார்ந்த முதன்மை சுகாதார பராமரிப்பு மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான தயார்நிலை ஆகியவற்றில் கியூபா புகழ் பெற்ற நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
கியூபாவுடன் தென்னாபிரிப்பாக சிறப்பு உறவைக் கொண்டுள்ளது. இது நிறவெறிக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தமைக்காகும்.
தெற்கு அங்கோலாவில் போராடி இறந்த கியூப துருப்புக்களை உள்ளடக்கிய ஒரு மோதல் சம்பவத்தின் பின்னர் இந்த இறுக்கமான உறவு உருவானதாகும்.
1990ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், புரட்சிகரத் தலைவர் பிடல் காஸ்ட்ரோவுக்கு இதற்காக பலமுறை நன்றி தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவில் சனிக்கிழமை நிலவரப்படி 4,361பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 86பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1473பேர் குணமடைந்துள்ளனர்.