அமெரிக்கர்கள் தெரிந்துகொள்வதற்கு வெகுமுன்னதாகவே பெருவாரியான அமெரிக்க நகரங்களில் கொரோனாவைரஸ் தொற்றுநோய் ( கொவிட் –19 ) பரவத்தொடங்கியிருக்கக்கூடும் என்று நோர்த்ஈஸ்ரேர்ண் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வொன்றை மேற்கோள் காட்டி நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மார்ச் 1 இல் நியூயோர்க் நகரம் அதன் முதல் கொரோனாவைரஸ் தொற்றை உறுதிப்படுத்திய நேரமளவில் நகரின் ஊடாக சந்தடியில்லாமல் வைரஸ்  ஆயிரக்கணக்கானோரை  தொற்றிக்கொண்டிருந்தது என்று ” அமெரிக்க நகரங்களில் ஔிந்து பரவிக்கொண்டிருந்த கொரோனாவைரஸ் ” என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.இதை நியூயோர்க் ரைம்ஸின் இணையப்பதிப்பு வியானன்று வெளியிட்டது.

பொஸ்ரன், சான்பிரான்சிஸ்கோ, சிக்காகோ மற்றும் சீற்றில் நகரங்களில் பெரும்பாலும் கண்டுபிடிக்கமுடியாத முறையில் பரவிக்கொண்டிருந்திருக்கிறது.வைரஸ் பரவல் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது என்பதை மருத்துவச் சோதனைகள் மூலம் தெரிந்துகொள்வதற்கு வெகுமுன்னதாகவே அது பரவத்தொடங்கிவிட்டது.

பெப்ரவரி முற்பகுதியில் கூட — முழு உலகினதும் கவனம் சீனா மீது குவிந்திருந்த வேளையில் — அமெரிக்க நகரங்கள் பலவற்றில் வைரஸ் பரவியிருக்க்கூடிய வாய்ப்பு இருந்தது மாத்திரமல்ல, பரவல் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளுக்கும் சென்றுவிட்டது என்றும் அறிக்கை கூறியிருக்கிறது.

Share.
Leave A Reply