உலகையே நெருக்கடிக்குள் தள்ளியுள்ள கொரோனாவால், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,384 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 1,010,365 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56, 797 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,063,008ஆக உள்ளது. கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 211,447 ஆக உள்ளது. அது போல் குணமடைந்தோரின் எண்ணிக்கை 921,147ஆக உள்ளது.

 

கொரோனாவால் சீனாவுக்கு பிறகு அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காவில்தான். அங்கு கொரோனாவால் 1,010,356 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 56,797பேர் இறந்துள்ள நிலையில், அங்கு மொத்தம் 138,990 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் அமெரிக்காவில் 1,384 பேர் பலியாகியுள்ளனர்.

அது போல் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 229,422 ஆக உள்ளது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 23,521 பேர் ஆகும். குணமடைந்தோரின் எண்ணிக்கை 120,832பேராகும்.

மேலும், இத்தாலியில் 199,414 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 26,977 ஆகும்.

பிரான்ஸில் 165, 842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 45,513 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  23,293 பேர் பலியாகியுள்ளனர்.

ஜெர்மனியில் 1,58,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இங்கு பலி எண்ணிக்கை  6,126 ஆக உள்ளது.

பிரித்தானியாவில்,  157,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 21,092பேர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் 14,423 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இங்கு 1,095 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் பலியாகியுள்ளனர்.

ஜப்பானில் 13, 441 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 1,809 பேர் குணமடைந்தும், 372 பேருக்கு பலியாகிவிட்டனர்.

பாகிஸ்தானில் 13,915 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 292 பேர் பலியாகிவிட்டனர், 3,029 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply