பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் தனது 67 வயதில் இன்று (ஏப்ரல் 30) காலமானார்.

நேற்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் இன்று மும்பை ஹெச்.என் ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனையில் காலமானார்.

ரிஷி கபூரின் சகோதரரான ரன்தீர் கபூர் இந்த செய்தியை பிபிசியிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக ரிஷி கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

2018ல் அவருக்கு புற்றுநோயால் கண்டறியப்பட்ட நிலையில், பல மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று 2019-இல் இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பிய ரிஷி கபூர் பலமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த பிப்ரவரியில் அவர் இரண்டுமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.


பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷி கபூர், கடந்த 1973-இல் வெளியான ‘பாபி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆனால், அதற்கு முன்னதாக ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார்.

 

Share.
Leave A Reply