அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 201 பேர் பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆயிரத்தை கடந்தது.

உலகம் முழுவதும் 33 லட்சத்து 7 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 லட்சத்து 34 ஆயிரத்து 410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 50 ஆயிரத்து 944 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 10 லட்சத்து 39 ஆயிரத்து 168 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 10 லட்சத்து 95 ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 30 ஆயிரத்து 825 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 201 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply