உக்ரைனில் துண்டிக்கப்பட்ட தலையை பிளாஸ்டிக் பையில் வைத்து, கையில் கத்தியுடன் நிர்வாணமாக நடந்து வந்த பெண்ணால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்
உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வருபவர் டாட்டியானா (வயது 38). டாட்டியானாவுடன் அவரது அண்ணனும் வசித்து வருகிறார். டாட்டியானாவின் மகள் கிறிஸ்டினா (வயது 11).
இன்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் பிளாட்டிற்கு வெளியே உள்ள சாலையில் டாட்டியானா ஒரு கையில் பிளாஸ்டிக் பையில் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து எடுத்துக் கொண்டு, மற்றொரு கையில் ரத்தம் சொட்டிய கத்தியை பிடித்துக் கொண்டு நிர்வாணமாக நடந்து சென்றார். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
டாட்டியானாவின் சகோதரர் வீட்டில் தலையில்லாத உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பொலீஸ்க்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்ணை மடக்கினர். ஆனால் கையில் உள்ள கத்தியால் குத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தா்ர. நீண்ட போராட்டத்திற்குப் பின் அந்த பெண்ணை கைது செய்தனர்.
இதுகுறித்து அந்த பெண்ணின் அண்ணன் கூறுகையில் ‘‘டாட்டியானா வேலைக்கு சென்று வந்தார். அவர் ஏழ்மையாக இருந்தாலும், சமூகத்தில் மிகவும் பின்தங்கியிருந்தார் என்று கூற முடியாது’’ என்றார்.
அருகில் வசிக்கும் மற்றொருவர் கூறுகையில் ‘‘டாட்டியானா சாதாரணமாகத்தான் இருந்தார். அவளிடம் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் தெரியவில்லை. போதை பொருட்களுக்கோ, மதுவுக்கு அடிமையில்லை. பொது விடுமுறை அன்று மது அருந்துவார். குழந்தை கிறிஸ்டினா அழகாக இருப்பார். பள்ளிக்கு சென்று வந்தார். வேறு என்ன சொல்ல முடியும்?’’ என்றார்.